×

குழந்தை இறந்தும்; நெஞ்சில் ஈரமில்லாத வியாபாரிகள் மீண்டும் மாஞ்சா நூல் அறுத்து வாலிபருக்கு காயம்

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் காற்றாடி மாஞ்சா நூலில் கோபால் என்பவரின் மூன்று வயது மகள் அபினேஷ்  சமீபத்தில் பலியானான். இந்த சம்பவம்   மறைவதற்குள் மீண்டும் புளியந்தோப்பில் காற்றாடி மாஞ்சா நூலால் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை மட்டுமே பார்க்கும் வியாபாரிகளின் நெஞ்சில் ஈரமே இல்லை என்பதையே இது நிரூபிக்கிறது. சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் வயது 25. இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார் இன்று காலை வழக்கம் போல கொடுங்கையூரில் இருந்து புளியந்தோப்பு கன்னிகாபுரம் வழியாக வேலைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது கன்னிகாபுரம் மாநகராட்சி திடல் அருகே சென்ற பொழுது அவரது கழுத்தில் மாஞ்சா நூல் சுற்றியது உடனடியாக உஷாரான ராஜசேகரன் தனது ஒரு கையால் மாஞ்சா நூலை பிடித்து வண்டியை ஓரம் கட்டினார்.

இதனால் கழுத்து வேகமாக அறுபடுவது  தாமதமானது உடனடியாக வண்டியை நிறுத்தி கீழே இறங்கி கழுத்தில் ரத்தம் வருவதை கண்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது ராஜசேகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் காற்றாடி விட்ட  12 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். எவ்வளவுதான் காவல்துறை சார்பில் காற்றாடி விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் வடசென்னையில் காற்றாடி விடுவதை கட்டுபடுத்த முடியவில்லை என்பதேயே  இந்த சம்பவம் சுட்டி காட்டுகிறது.

Tags : baby ,merchants , Manja yarn, cut off, injures youth
× RELATED மாணவ பருவத்திலேயே திட்டமிட வேண்டும்